Tag Archives: Culture
இறைச்சிக்காக கால்நடை விற்பனை மத்திய அரசின் சட்டத் திருத்தம் : இடைக்காலத் தடை நீட்டிப்பு
மதுரை: இறைச்சிக்காக, கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடை செய்யும், மத்திய அரசின் சட்டத்திருத்த புதிய விதிகளை, நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை வழக்கறிஞர் செல்வகோமதி தாக்கல் செய்த பொதுநல மனு:
பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி, பிராணிகளை உணவு, ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம்.
இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, புதிய விதிகளை மத்திய
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலர் மே 23 ல்
அறிவித்தார். இதன்படி மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை இறைச்சிக்காக, சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்படி இவற்றை விற்பனை செய்வோர், வாங்குவோர் ‘இறைச்சிக்காக பயன்படுத்தமாட்டோம்’ என உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இறைச்சிக்காக கால்நடைகளை பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் ஏற்புடையதல்ல. வயதான மாடுகளை பராமரிப்பது இயலாது. மத்திய அரசின் புதிய விதிகள், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில்
உள்ளது.
பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திருத்த புதிய விதிகள் சட்டவிரோதம் என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். அதை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்க
வேண்டும். இவ்வாறு செல்வகோமதி மனு
செய்திருந்தார்.
இதுபோல், மதுரை களிமங்கலம் ஆசிக் இளாகி பாவா மற்றொரு மனு செய்திருந்தார்.
மே 30 ல் கோடை விடுமுறைக்கால
நீதிபதிகள் அமர்வு,’சட்டத் திருத்தத்தின்படி புதிய விதிகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டது.
நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.
மத்திய அரசு
வழக்கறிஞர், “பதில் மனு தாக்கல் செய்ய கால
அவகாசம் தேவை,” என்றார். இதை ஏற்ற
நீதிபதிகள், இடைக்காலத் தடையை ஜூலை 7வரை நீட்டித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த செய்தி தினமலர் இனையதளதில் இருந்து.
பீட்டாவுக்கு வசதியாக மாறிய சட்டம் – ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்!
May 26, 2017 05:49 pm
காளை மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசுவதை கூட மத்திய அரசின் புதிய விதிமுறை தடுத்து நிறுத்தியுள்ளது.
இதன்படி பார்த்தால் இனிமேல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக் குறியாகியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில், 1960ம் ஆண்டு, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இனிமேல், மாடுகளைஇறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது.
இந்த விதிமுறையில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
பசு, காளை, ஒட்டகம், எருமைமாடு போன்றவற்றை சிறிதளவும் கொடுமைப்படுத்திவிட கூடாது என்பதே விதிமுறை சாராம்சம்.
விசித்திரம், வேதனை இந்த அடிப்படையில் ஒரு விசித்திர விதிமுறையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
அதாவது பசு மற்றும் காளைகளின் கொம்புகளில் பெயிண்ட் அடிப்பது கூட குற்றம்தானாம். இவ்வாறு செய்வோருக்கு சிறை தண்டனை கூட கிடைக்கும்.
மழையில் மாடு நனையக் கூடாதாம் மழையில் மாடு நனையக் கூடாதாம் மாடுகளுக்கு அலங்காரம் செய்வது, ஆபரணங்கள் அணிவிப்பது (தமிழ் விவசாயிகளின் பாரம்பரிய வழக்கம் இது), ஆகியவற்றையும் அரசு தடை செய்துள்ளது.
இந்த கால்நடைகளை வளர்ப்பவர் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
மோசமான வானிலையில் இந்த கால்நடைகளை இருக்க விடக்கூடாது (அப்படியானால் வெயில், மழை காலத்தில் தொழுவத்தில் எப்படி மாடுகளை கட்டுவார்கள்?).
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு இப்படி விதிமுறைகளை அடுக்கிக்கொண்டே போகிறது மத்திய அரசு. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மழை, வெயில் கூட படாமல் மாட்டை பாதுகாக்க சட்டம் சொல்கிறதே அப்படியானால் அதை பிடித்து மேலே தொங்கியபடி அடக்கும் ஜல்லிக்கட்டு நிலைமை என்னவாகும்?
இந்த செய்தி முதன்மை செய்தி சேவையில் இருந்து.
கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா
Published on : 07th May 2017 08:47 AM
கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மல்லியகரையை அடுத்த கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மதுரை,திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, கூடமலை, கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இதே போல திருச்சி, மதுரை, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 550 பேர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுகளில் தங்கக் காசு, தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண்கயிறு, பட்டுவேட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களை கட்டியிருந்தனர். அதே போல் மாடுபிடிவீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
மேலும், ஜல்லிக்கட்டு விழாவையொட்டி ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் தலைமையில் மல்லியகரை காவல் ஆய்வாளர் (பொ) தட்சிணாமூர்த்தி, ஆத்தூர் காவல் ஆய்வாளர் கேசவன், தலைவாசல் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த செய்தி தினமணி இனைதளத்தில் இருந்து.
புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு; 15 பேர் காயம்
Published on : 17th May 2017 06:19 AM
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க முயன்ற 15 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
புள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள குளுந்தாளம்மன் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டுப் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தானின் 10 காளைகள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டியபோதும், வாடிவாசல் வழியே வந்த பெரும்பான்மையான காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறி பாய்ந்து சென்றன. 15 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயமேற்பட்டது. இவர்களுக்கு அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டு உரிய விதிகளின்படி நடைபெறுகிறதா என லால்குடி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, வட்டாட்சியர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் பார்வையிட்டனர்.லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பேட்ரிக் தலைமையில் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காளைகளை அடக்கிய சிறந்த வீரர்களுக்கும், வீரர்களிடம் அகப்படாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், வெள்ளிக்காசுகள், சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விழா குழுவினர் பரிசாக வழங்கினர்.
இந்த செய்தி தினமணி இனையதளத்தில் இருந்து.
ஜல்லிக்கட்டு போட்டி : ஜூன் முதல் தடை
பதிவு செய்த நாள் 16 மே 2017 07:33
தமிழகத்தில், ஜூன் முதல், ஏழு மாதங்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த, அரசு தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள், நடப்பாண்டு ஜனவரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பங்களை பரிசீலித்து, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.
– நமது நிருபர் -தினமலர்