உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா: அலங்காநல்லூரில் காளைகள் முன்பதிவு தொடங்கியது

பதிவு செய்த நாள் : Jan 06 | 06:45 pm

அலங்காநல்லூர்,

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி காளைகளின் முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு

உலக புகழ்பெற்ற அலங்காநல்லு£ர் ஜல்லிககட்டு விழா வருகிற 16–ந்தேதி (வியாழககிழமை) கோட்டை முனிசாமி திடலில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிககட்டில் கலந்துகொள்ளும் காளைகளின் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதற்காக மதுரை, தேனி, திண்டுககல், திருச்சி, புதுககோட்டை, வேலு£ர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகளின் உரிமையாளர்கள் வந்தனர்.

அவர்கள் நேற்று அதிகாலை முதலே அலங்காநல்லூர் வருவாய்துறை அலுவலகத்தில் வரிசையில் காத்திருந்தனர். காளைகளின் முன்பதிவு காலை 8 மணிககு தொடங்கியது. சமயநல்லு£ர் காவல்துறை துணைகண்காணிப்பாளர் காந்தசொரூபன் மற்றும் அலங்காநல்லு£ர் காவல்துறை ஆய்வாளர் சிவககுமார், ஜல்லிககட்டு விழா கமிட்டியை சேர்ந்த பாலாஜி, சுந்தரராகவன், சுந்தரராஜன் உள்ளிட்டோர் காளைகளின் பதிவை தொடங்கி வைத்தனர்.

டோக்கன் முறை

இதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் கால்நடைத்துறை மருத்துவர்களால் பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் மாடு பதிவிற்கான ஆவணங்களை கொடுத்து காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்தனர். கடந்த ஆண்டு 519 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் 27 காளைகள் தகுதி நீககம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 600 மாடுகள் வரை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு டோககன் முறையில் காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது.

இதனால் பதிவு பெற்ற காளைகள் அனைத்தும் காலதாமதமின்றி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பதிவு பெற்ற காளைகள் வரிசை நம்பர் படி 1 முதல் 50 மாடுகளும் அதை தொடர்ந்து வரிசையாக முறைப்படி அதே முறையில் மற்ற மாடுகளும் அவிழ்த்துவிடப்படும். ஜல்லிககட்டு விழா காலை 8 மணிககு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும் நேற்று ஒரே நாளில் 240 காளைகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் நாளையும் காளைகளின் பதிவு நடைபெற உள்ளது.

இந்த செய்தி ‘தின தந்தி’ (இணையதளம்) – ‘செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை‘ – தொகுப்பில் வெளிவந்தது !

தமிழனின் வீர மரபு !

%d bloggers like this: