இறைச்சிக்காக கால்நடை விற்பனை மத்திய அரசின் சட்டத் திருத்தம் : இடைக்காலத் தடை நீட்டிப்பு

மதுரை: இறைச்சிக்காக, கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடை செய்யும், மத்திய அரசின் சட்டத்திருத்த புதிய விதிகளை, நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை வழக்கறிஞர் செல்வகோமதி தாக்கல் செய்த பொதுநல மனு:
பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி, பிராணிகளை உணவு, ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம்.
இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, புதிய விதிகளை மத்திய
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலர் மே 23 ல்
அறிவித்தார். இதன்படி மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை இறைச்சிக்காக, சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்படி இவற்றை விற்பனை செய்வோர், வாங்குவோர் ‘இறைச்சிக்காக பயன்படுத்தமாட்டோம்’ என உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இறைச்சிக்காக கால்நடைகளை பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் ஏற்புடையதல்ல. வயதான மாடுகளை பராமரிப்பது இயலாது. மத்திய அரசின் புதிய விதிகள், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில்
உள்ளது.
பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திருத்த புதிய விதிகள் சட்டவிரோதம் என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். அதை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்க
வேண்டும். இவ்வாறு செல்வகோமதி மனு
செய்திருந்தார்.
இதுபோல், மதுரை களிமங்கலம் ஆசிக் இளாகி பாவா மற்றொரு மனு செய்திருந்தார்.
மே 30 ல் கோடை விடுமுறைக்கால
நீதிபதிகள் அமர்வு,’சட்டத் திருத்தத்தின்படி புதிய விதிகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டது.
நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.
மத்திய அரசு
வழக்கறிஞர், “பதில் மனு தாக்கல் செய்ய கால
அவகாசம் தேவை,” என்றார். இதை ஏற்ற
நீதிபதிகள், இடைக்காலத் தடையை ஜூலை 7வரை நீட்டித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த செய்தி தினமலர் இனையதளதில் இருந்து.

Leave a Reply