கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா

Published on : 07th May 2017 08:47 AM  

கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மல்லியகரையை அடுத்த கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மதுரை,திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, கூடமலை, கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இதே போல திருச்சி, மதுரை, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 550 பேர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுகளில் தங்கக் காசு, தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண்கயிறு, பட்டுவேட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களை கட்டியிருந்தனர். அதே போல் மாடுபிடிவீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
மேலும், ஜல்லிக்கட்டு விழாவையொட்டி ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் தலைமையில் மல்லியகரை காவல் ஆய்வாளர் (பொ) தட்சிணாமூர்த்தி, ஆத்தூர் காவல் ஆய்வாளர் கேசவன், தலைவாசல் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த செய்தி தினமணி இனைதளத்தில் இருந்து.

Leave a Reply