அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 08, 6:30 PM IST

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

அலங்காநல்லூர், ஜன. 8–

ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை பதிவு செய்ய பலரும் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற 16–ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதை யொட்டி அங்குள்ள வருவாய் துறை அலுவலகத்தில் காளைகள் பதிவு கடந்த 6–ந்தேதி முதல் நடந்து வருகிறது.

நேற்றைய பதிவின்போது கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருவாய் துறை அலுவலக சுற்று சுவர் மீது கூட்டமாக சாய்ந்ததால் பாரம் தாங்காமல் சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடந்த 2 நாட்களாக நடந்த பதிவில் 650 காளைகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 250–க்கு மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளி மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் 2 நாட்கள் காத்திருந்தும் பதிவு செய்ய முடியாமல் அதிக வருத்தத்துடன் சென்றனர்.

மேலும் கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த காலகெடுவான காலை 8மணி முதல் மதிய 2 மணிக்குள் ஜல்லிக்கட்டு முடிந்தது. எந்தவித கெடுபிடியும் இல்லாமல் மைதானத்திற்கு வந்த 519 மாடுகளில் உரிய பரிசோதனைக்கு பின்னர் 498 மாடுகள் அவிழ்க்கப்பட்டது.

இந்த வருடம் நடைபெறும் ஜல்லிக்கட்டையொட்டி கோட்டை முனிசாமி வாடிவாசல் திடல், மற்றும் வெளிநாட்டு பயணிகள் அமர்ந்து பார்த்து மகிழும் சுற்றுலாதுறை மேடை வர்ணம் பூசும் பணி நடந்துவருகிறது. இதேபோல் பாலமேட்டில் 15–ந் தேதி ஜல்லிககட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசல் வர்ணம் பூசும் பணியும், பார்வையாளர்கள் மேடை உள்ளிட்ட தடுப்பு வேலி அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

விழா ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் விழா கமிட்டியினரும், பேருராட்சி நிர்வாகத்தினரும், கிராம பொதுமக்களும் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளும் கவனித்து வருகின்றனர்.

இந்த செய்தி ‘மாலை மலர் ’ (இணையதளம்) தொகுப்பில் ஜனவரி 08, 2014 அன்று வெளிவந்தது !

2 thoughts on “அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு”

 1. Request I want to participate in this years JalliKattu and I have come from U.S to witness this event. At this time I am based in Coimbatore and do let me know How I can get an entry in to the field along with A local driver from Coimbatore.

  Kindly let me know of the same to enable me to witness this event and to ensure a proper seating place.

  Sincerely

  Krishnan

  1. Hi Krishnan,

   Jallikattu is happening in several places, some of which have been listed in our website.

   Most of the venues have government / local authority galleries which are free. These might tend to be crowded and you may have to go as early as 3 or 4 am to get proper / good seating.

   Alanganallur, the most famous of all Jallikattus, has a very limited VIP accomodation for which you have to get ‘passes’ from the PRO (district Collector’s office). Tamilnadu Tourism Board also reserves a few of these seats for foriegn tourists and NRIs.

   In some venues, locals have private galleries which may be paid ones.

   And of course most places have roof-tops !

   So depending on where you would like to visit, the procedure varies.

   Unfortunately, since our local organisers are having to battle with the courts, authorities and so-called animal activists, they have to run from pillar to post to shell out hefty (risk)deposit amount and to get permission to conduct this event. Hence we do not have a system in place for a smoother experience for outside travellers / tourists. This is the sad truth.

   I am planning to visit a few Jallikattu this year. I am also based in Coimbatore. You can reach me at 9003368489. Let us discuss the available options.

   Hope you have a great experience of our Tamil Sport !

   Thank you.

   Regards
   Balakumar Somu
   balasomu@jallikattu.in
   9003368489

Leave a Reply