பாலக்குறிச்சி ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆய்வு

பதிவு செய்த நேரம்:2014-01-08 10:50:26

துவரங்குறிச்சி, :  துவரங்குறிச்சி அருகே பாலக்குறிச்சி ஆவாரங்காடு, பொன்னர்சங்கர் கோயில் திடலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஜனனிசெளந்தர்யா ஆய்வு செய்தார்.
பாலக்குறிச்சி ஆவாரங்காடு, பொன்னர்சங்கர் கோயில் திடலில் ஒவ்வொரு வருடமும் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் பாலக்குறிச்சி கலிங்கப்பட்டி, சோலையம்மாபட்டி, கீரணிப்பட்டி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைவிட சிறப்பு வாய்ந்தது. இதில் ஏராளமான காளைகள் பங்கேற்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். இந்த வருடம் மதுரை உயர்நீதி மன்றக்கிளை உத்தரவின்படி வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இரவு பகலாக நடந்து வருகிறது.
பாலக்குறிச்சி கலிங்கப்பட்டி, சோலையம்மாபட்டி, கீரணிப்பட்டி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், ஆவாரங்காடு ஜல்லிக்கட்டின்போது தங்களுடைய நேர்த்தி கடனுக்காக திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பாக்கு வைத்து ஆவாரங்காடு ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வருவது வழக்கமாகும்.
இந்த ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், வெள்ளிக்காசுகள், எவர்சில்வர் பொருட்கள், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகளும் 300க்கும் மேற்பட்ட காளையை அடக்கும் வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று முதல் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் 10000 மேற்பட்ட பார்வையாளர்கள் அமர இருபுறமும் கேலரிகள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு ஜனவரி16ம் தேதி காலை 10மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஜனனிசெளந்தர்யா பார்வையிட்டு குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய உத்தரவிட்டார். அப்போது மருங்காபுரி தாசில்தார் சுலோச்சனா, மணப்பாறை டிஎஸ்பி.கணேசன், வளநாடு எஸ்ஐ அம்பிகா, மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) திருச்சி  தொகுப்பில்  2014-01-08  அன்று வெளிவந்தது !

One thought on “பாலக்குறிச்சி ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆய்வு”

  1. Pingback: oakley sunglasses

Leave a Reply