ஜல்லிக்கட்டு – தமிழனின் வீர மரபு !

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. இதற்கு ‘மஞ்சுவிரட்டு’, ‘ஏறுதழுவுதல்’ என பல பெயர்கள் உண்டு.  பல நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த வீர விளையாட்டு இன்றும் தமிழகத்தின் பல கிராமங்களில் விளையாடப்படுகிறது. ஆங்கில மாதங்கள் ஜனவரி முதல் ஜூலை வரை பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

பொங்கல் கொண்டாட்டமாகவும், சிவராத்திரிக்கும் வேறு பல கோவில் திருவிழாக்களுக்கும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

2006ம் ஆண்டுமுதல் இன்றுவரை பல்வேறு சோதனைகளை  சந்தித்துவருகிறது, நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு.

Leave a Reply