Category Archives: செய்திகள்

வீரம், பாசம், கவுரவம் ஜல்லிக்கட்டின் மறுபக்கம்

தமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை பண்டைக் கால இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வாள், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களை கையாள்வதில் மட்டுமின்றி, துள்ளித்திரியும் காளைகளை துணிந்து அடக்கும் இளைஞர்கள் பற்றி கலித்தொகையில் கொல்லேறு தழுவல் என குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை அறியலாம். ஜல்லிக்கட்டு எப்படி துவங்கியது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வீர  விளையாட்டாகவே இன்றளவும் கருதுகின்றனர். எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் தை மாத துவக்கத்தை தென் மாவட்ட மக்கள் உற்சாகத்தோடு  வரவேற்கின்றனர்.
தை முதல் நாளில் உழவுக்கு உதவி செய்யும் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு,  அதன்பின்
இவர்கள் களம் காணும் வீரத் திருவிழாதான் இந்த ஜல்லிக்கட்டு. நூற்றுக்கணக்கான காளைகள், ஆயிரக்கணக்கான காளையர்கள், லட்சக்க ணக்கான
பார்வையாளர்கள் கூடுவதால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமமே களை கட்டும். இதில் வீரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு
கவுரவமும் அடங்கியிருக்கிறது. ஒரு வீரர் ஒரு காளையை அடக்கும் முயற்சி யில் வெற்றி பெற்று விட்டால் அவருக்கு பரிசுகளும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் காளையை அடக்க முயன்று தோல்வியை தழுவிவிட்டால் விழுப் புண் அல்லது உயிரிழப்பு கூட நேரிடலாம்.

அதேபோல், தான் வளர்க்கும் காளை யாரிடமும் பிடிபடாமல் வந்து விட்டால் அதன் உரிமையாளர், அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கி, தனது கவுரவம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக வெளியே வருவார். மாறாக காளை அடக்கப் பட்டு விட்டால் பெரும் அவமானத்துடன் வீடு செல்ல நேரிடும். எனவே தான் கவுரவம், வீரம் ஆகிய இரண்டையும் மனதில் கொண்டு ஜல்லிக்கட்டு தொடங்கும் சீசனுக்கு ஒரு மாதம் முன்னதாக காளைகள், காளை யர்களுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்துவதே தனி கலை.

நாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.

அதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து  மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆவதாக அவற்றின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை பயிற்சிக்கு பின் களமிறங்கும் காளைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை கலக்கி விட்டு கம்பீரமாக வெளியேறினால் அவற்றின் மவுசு பல  மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிறப்பு பெற்ற பல காளைகள் ரூ1.5 லட்சத்திற்கும் அதிகமாக கூட விற்பனையாகின்றன. அதேசமயம் பிடிபட்டு விட் டால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதி அதனை அடிமாட்டு விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். எனவே தான், ஜல்லிக்கட்டு தமிழர் களின் வீரத்தோடு மட்டுமின்றி உணர்வோடு கலந்ததாகவும் விளங்கி வருகிறது.

பயிற்சிக்கு பின் அரங்கேற்றம் தொடங்கும் காளைகள் சுமார் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. அதன்பின் அந்த காளைகளை
ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லாமல் தொடர்ந்து வீட்டில் வைத்தே குடும்பத்தில் ஒருவரை போல் பராமரிக்கின்றனர். பாசமாக வளர்த்த காளை  இறந்து
விட்டால், அவற்றிற்கு வீட்டருகே கோயில் கட்டி வழிபாடு நடத்துவதையும் பல கிராமங்களில் காண முடிகிறது. இப்படி சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே நடந்து வரும் (கி.மு.2000) ஜல்லிக்கட்டிற்கு எதிராக தற்போது கிளம்பியுள்ள அத்தனை  தடைகளையும் தாண்டி, அதனை தொடர்ந்து நடத்தும் ஆற்றல் தமிழர்களுக்கு கிடைத்ததற்கு காளைகள் மீதான பாசம், காளைகளுடன் மல்லுக்கட்டும்  வீரம், காளைகளால் கிடைக்கும் கவுரவம் ஆகியவை தான் காரணம் என்பதை உணர முடிகிறது.

இந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) தொகுப்பில் 2013-12-11 அன்று வெளிவந்தது !

பாலக்குறிச்சி ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆய்வு

பதிவு செய்த நேரம்:2014-01-08 10:50:26

துவரங்குறிச்சி, :  துவரங்குறிச்சி அருகே பாலக்குறிச்சி ஆவாரங்காடு, பொன்னர்சங்கர் கோயில் திடலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஜனனிசெளந்தர்யா ஆய்வு செய்தார்.
பாலக்குறிச்சி ஆவாரங்காடு, பொன்னர்சங்கர் கோயில் திடலில் ஒவ்வொரு வருடமும் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் பாலக்குறிச்சி கலிங்கப்பட்டி, சோலையம்மாபட்டி, கீரணிப்பட்டி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைவிட சிறப்பு வாய்ந்தது. இதில் ஏராளமான காளைகள் பங்கேற்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். இந்த வருடம் மதுரை உயர்நீதி மன்றக்கிளை உத்தரவின்படி வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இரவு பகலாக நடந்து வருகிறது.
பாலக்குறிச்சி கலிங்கப்பட்டி, சோலையம்மாபட்டி, கீரணிப்பட்டி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், ஆவாரங்காடு ஜல்லிக்கட்டின்போது தங்களுடைய நேர்த்தி கடனுக்காக திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பாக்கு வைத்து ஆவாரங்காடு ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வருவது வழக்கமாகும்.
இந்த ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், வெள்ளிக்காசுகள், எவர்சில்வர் பொருட்கள், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகளும் 300க்கும் மேற்பட்ட காளையை அடக்கும் வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று முதல் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் 10000 மேற்பட்ட பார்வையாளர்கள் அமர இருபுறமும் கேலரிகள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு ஜனவரி16ம் தேதி காலை 10மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஜனனிசெளந்தர்யா பார்வையிட்டு குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய உத்தரவிட்டார். அப்போது மருங்காபுரி தாசில்தார் சுலோச்சனா, மணப்பாறை டிஎஸ்பி.கணேசன், வளநாடு எஸ்ஐ அம்பிகா, மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) திருச்சி  தொகுப்பில்  2014-01-08  அன்று வெளிவந்தது !