Category Archives: Uncategorized

தமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்க கூடாது: வைகோ அறிக்கை

நாள் : Apr 09 | 02:00 am   சென்னை,

தமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது என்றும், அந்த போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பாரம்பரிய விளையாட்டு

தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பல்வேறு காரணங்களை கூறி தடை ஏற்படுத்திடும் முயற்சிகள் நடைபெற்ற போதெல்லாம் அதை வன்மையாக கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன்.

வளர்ந்து செழித்த ஐரோப்பா கண்டத்தின் ஸ்பெயின் நாட்டில் இன்றும் மாடுபிடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பலரும் காயம் அடைகின்றனர்; உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆனாலும் அந்த வீர விளையாட்டு தொடர்கிறது.

உலக நாட்டு பயணிகள்

சங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல் எனும் வீரக்கலை வாலிபர்களின் திருவிழா கலையாகவே திகழ்ந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைக் காண உலக நாட்டு பயணிகள் வந்து குவிகின்றனர். இதில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளை மக்கள் கண்போல் பாதுகாத்து வருகின்றனர்.

போட்டியில் பங்கேற்கும் காளை மாடுகளுக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்படுவதில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போருக்கு காயம் ஏற்படுவதை காரணம் காட்டி தடை செய்வது அறிவீனம் ஆகும்.

எந்த தடையும் விதிக்கக்கூடாது

நெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான விபத்துகளில் பலர் உயிர் இழக்கின்றனர்; காயம் அடைகின்றனர். இதற்காக சாலைகளில் வாகனங்களே ஓட்டக்கூடாது என்று அரசு சட்டம் கொண்டுவர முடியுமா? எனவே, ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது.

மதுரை மாவட்டத்தில், கரடிக்கல் உள்ளிட்ட பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். தமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன்.

இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

இந்த செய்தி ‘தின தந்தி ’ (இணையதளம்) தொகுப்பில் ஏப்ரல் 09, 2014 அன்று வெளிவந்தது !

Jallikattu.in T-Shirt பரிசு !

நண்பர்களே, அடுத்த ஜல்லிக்கட்டு எங்கே எப்பொழுது நடைபெறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

http://www.jallikattu.in இணையதளத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய புகைப்படங்கள், செய்திகள் வெளியிட்டு உலகளாவிய தமிழ் மக்களின் ஆதரவை திரட்டிக்கொண்டிருக்கிறோம்.

உங்களிடம் ஜல்லிக்கட்டு புகைப்படம், video இருந்தால் அவற்றை www.jallikattu.in இணையதளத்திற்கு அனுப்பவும். email : balasomu@jallikattu.in

நீங்களோ உங்கள் நண்பரோ அல்லது உங்கள் காளையோ இந்த வருடம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று , பரிசு பெற்றிருந்தால், புகைப்படத்துடன் தகவல்களை அனுப்புங்கள். www.jallikattu.in  இணையதளத்தில் வெளியிடுவோம். email : balasomu@jallikattu.in

உங்கள் புகைப்படம் Jallikattu.in இணையதளத்தில் வெளியிடபெற்றால் (வெற்றி பெற்றவர்களுக்கு) Jallikattu.in T-Shirt பரிசாக வழங்கப்படும் !

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 08, 6:30 PM IST

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

அலங்காநல்லூர், ஜன. 8–

ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை பதிவு செய்ய பலரும் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற 16–ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதை யொட்டி அங்குள்ள வருவாய் துறை அலுவலகத்தில் காளைகள் பதிவு கடந்த 6–ந்தேதி முதல் நடந்து வருகிறது.

நேற்றைய பதிவின்போது கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருவாய் துறை அலுவலக சுற்று சுவர் மீது கூட்டமாக சாய்ந்ததால் பாரம் தாங்காமல் சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடந்த 2 நாட்களாக நடந்த பதிவில் 650 காளைகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 250–க்கு மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளி மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் 2 நாட்கள் காத்திருந்தும் பதிவு செய்ய முடியாமல் அதிக வருத்தத்துடன் சென்றனர்.

மேலும் கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த காலகெடுவான காலை 8மணி முதல் மதிய 2 மணிக்குள் ஜல்லிக்கட்டு முடிந்தது. எந்தவித கெடுபிடியும் இல்லாமல் மைதானத்திற்கு வந்த 519 மாடுகளில் உரிய பரிசோதனைக்கு பின்னர் 498 மாடுகள் அவிழ்க்கப்பட்டது.

இந்த வருடம் நடைபெறும் ஜல்லிக்கட்டையொட்டி கோட்டை முனிசாமி வாடிவாசல் திடல், மற்றும் வெளிநாட்டு பயணிகள் அமர்ந்து பார்த்து மகிழும் சுற்றுலாதுறை மேடை வர்ணம் பூசும் பணி நடந்துவருகிறது. இதேபோல் பாலமேட்டில் 15–ந் தேதி ஜல்லிககட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசல் வர்ணம் பூசும் பணியும், பார்வையாளர்கள் மேடை உள்ளிட்ட தடுப்பு வேலி அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

விழா ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் விழா கமிட்டியினரும், பேருராட்சி நிர்வாகத்தினரும், கிராம பொதுமக்களும் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளும் கவனித்து வருகின்றனர்.

இந்த செய்தி ‘மாலை மலர் ’ (இணையதளம்) தொகுப்பில் ஜனவரி 08, 2014 அன்று வெளிவந்தது !

உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா: அலங்காநல்லூரில் காளைகள் முன்பதிவு தொடங்கியது

பதிவு செய்த நாள் : Jan 06 | 06:45 pm

அலங்காநல்லூர்,

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி காளைகளின் முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு

உலக புகழ்பெற்ற அலங்காநல்லு£ர் ஜல்லிககட்டு விழா வருகிற 16–ந்தேதி (வியாழககிழமை) கோட்டை முனிசாமி திடலில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிககட்டில் கலந்துகொள்ளும் காளைகளின் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதற்காக மதுரை, தேனி, திண்டுககல், திருச்சி, புதுககோட்டை, வேலு£ர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகளின் உரிமையாளர்கள் வந்தனர்.

அவர்கள் நேற்று அதிகாலை முதலே அலங்காநல்லூர் வருவாய்துறை அலுவலகத்தில் வரிசையில் காத்திருந்தனர். காளைகளின் முன்பதிவு காலை 8 மணிககு தொடங்கியது. சமயநல்லு£ர் காவல்துறை துணைகண்காணிப்பாளர் காந்தசொரூபன் மற்றும் அலங்காநல்லு£ர் காவல்துறை ஆய்வாளர் சிவககுமார், ஜல்லிககட்டு விழா கமிட்டியை சேர்ந்த பாலாஜி, சுந்தரராகவன், சுந்தரராஜன் உள்ளிட்டோர் காளைகளின் பதிவை தொடங்கி வைத்தனர்.

டோக்கன் முறை

இதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் கால்நடைத்துறை மருத்துவர்களால் பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் மாடு பதிவிற்கான ஆவணங்களை கொடுத்து காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்தனர். கடந்த ஆண்டு 519 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் 27 காளைகள் தகுதி நீககம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 600 மாடுகள் வரை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு டோககன் முறையில் காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது.

இதனால் பதிவு பெற்ற காளைகள் அனைத்தும் காலதாமதமின்றி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பதிவு பெற்ற காளைகள் வரிசை நம்பர் படி 1 முதல் 50 மாடுகளும் அதை தொடர்ந்து வரிசையாக முறைப்படி அதே முறையில் மற்ற மாடுகளும் அவிழ்த்துவிடப்படும். ஜல்லிககட்டு விழா காலை 8 மணிககு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும் நேற்று ஒரே நாளில் 240 காளைகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் நாளையும் காளைகளின் பதிவு நடைபெற உள்ளது.

இந்த செய்தி ‘தின தந்தி’ (இணையதளம்) – ‘செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை‘ – தொகுப்பில் வெளிவந்தது !