ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்!

Posted by: Mayura Akilan Published: Monday, May 19, 2014, 16:13 [IST]

டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் நடந்த 7ஆம் தேதி தடை விதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கறுப்புக்கொடி ஏற்றியும், கடைகளை அடைத்தும் தங்களின் எதிர்ப்பினை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா தாக்கல் செய்துள்ள மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது தவறு என்றும், ஒழுங்கு நெறிமுறைகளை வகுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

This news article has been reproduced from
Oneindia Tamil (Online edition) – dated  May 19, 2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>